பெயில் என்றால் என்ன ஒரு சிறிய விளக்கம்.
ஒரு குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளி மீது வழக்குத் தொடுத்து காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவர்கள் தான் அந்தக் குற்றத்தை செய்தார்கள் என்பதை நிரூபித்து குற்றவாளிக்கு தண்டணை பெற்று தருகிறார்கள்.
இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் செய்த குற்றங்களை பொறுத்து பெயிலில் விடக்கூடிய (Bailable-ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம்) வழக்கு மற்றும் பெயிலில் (Non_Bailable-ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்) விட முடியாத வழக்கு என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்றால் என்ன?
Bailable Offence.
பெயிலில் விடக்கூடிய வழக்குகள் (Bailable Offence) இவை பெரும்பாலும் சிறு சிறு குற்றங்களாகும்.
இது போன்ற குற்றங்களில் காவல்துறை அதிகாரியே கைது செய்யப்பட்டவரை பெயிலில் விடுவிக்கலாம். (சில குற்றங்களில் மட்டும்) ஜாமீன் தருவோர்கூட தேவையில்லை.
கைது செய்யப்பட்டவரிடமே ஜாமீன் பெற்று கொண்டு அவரை காவல்துறை அதிகாரி பெயிலில் விடலாம்.
ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என்றால் என்ன?
Non Bailable Offence.
பெயிலில் விட முடியாத வழக்குகள் (Non Bailable Offence-ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்) இவை இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத் தண்டணை விதிக்கும் அளவிற்கு உள்ள பெரிய குற்றங்களாகும்.
இதுபோன்ற குற்றங்களில் குற்றம் செய்தவர்களை காவல்துறை அதிகாரியால் கைது செய்யத்தான் முடியும் ஆனால் பெயிலில் விட முடியாது.
எனவே இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உரிய நீதிமன்றத்தில்தான் பெயில் பெற வேண்டும்.
அவ்வாறு பெயிலில் விட முடியாத வழக்கு ஒன்றில் காவல்துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒருவர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டால் அவருக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு தரப்பு வழக்கறிஞர் அவரினால் அந்த வழக்கில் என்னென்ன பிரச்சினை வரும் என்பதை குறிப்பிட்டு ஒவ்வெரு காரணத்தையும் எடுத்துரைத்து நீதிமன்றத்தின் முன்பாக வாதிடுவார்.
அந்த குற்றவாளிக்கு பெயில் கொடுக்கக் கூடாது என்று ஆட்சேபணை செய்வார் கடுமையான வாதங்களை முன் வைப்பார்.
அந்த காரணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த குற்றவாளியினால் பாதிப்புகள் ஏற்படும் வழக்கு திசை திருப்பபடும் என்று நீதிமன்றம் கருதினால் அந்த குற்றம்சாட்டபபட்ட நபரின் பெயில் மறுக்கப்படும்.
பெயில் மறுக்கபடுவதற்கான காரணங்கள் அவற்றில் சில.
*குற்றவாளிக்கு பெயில் கிடைத்தால் புகார்தாரருக்கு ஆபத்து.
*மேலும் சாட்சியங்கள் அழிக்கபடும்.
* குற்றவாளி விசாரணையின் போது முறையாக ஆஜராக மாட்டார்.
*சாட்சிகளை கலைத்துவிடுவார்.
*பெயிலில் வந்த பிறகு அவர் மேலும் வேறு குற்றங்களைப் புரிவார்.
*காவல்துறையின் விசாரணை இன்னும் முடியவில்லை.
*திருட்டுபோன பொருட்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை.
*குற்றம் புரிய பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை.
*சக குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
*சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து.
இப்படி பல கடுமையான காரசாரமான வாதம் ஏற்படும் நீதிமன்றத்தில் இது போன்ற அடுக்கடுக்கான வாதத்தை அரசுதரப்பு வழக்கறிஞர் வைக்கும் போது குற்றவாளியின் வழக்கறிஞர் அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து பதிலளிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் பெயில் or ஜாமீன் மனு தாக்கல் செய்யும் போது வழக்கறிஞரிடையே இப்படியெல்லாம் வாதம் நடைபெறும் பெயில் கொடுக்க கூடாது என்பதற்காக ஆனால் மேற்கண்ட குற்றங்களை மனுதாரர் ஒருபோதும் செய்யமாட்டார் என்பதை உறுதியளித்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு பெயில் கிடைக்கும்.
பெயில் கிடைக்க வேண்டும் என்பதற்காக கீழ்க்கண்ட காரணங்களை குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் கூறி வாதிடுவார்.
*பெயிலில் செல்லாவிட்டால் தனது வேலையை இழக்க நேரிடும்.
*குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் வருமானம் இன்றி பாதிக்கப்படுகிறது
*தனக்கு உடல் நலமில்லை, வெளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால்தான் குணமாக முடியும்.
*மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது தண்டனை கைதியை தொடர்ந்து சிறையில் வைப்பது என்பது நீதிக்கு எதிரானது.
ஜாமீன் எப்படி வழங்கபடுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்:
நீதிமன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்படுகிறது.
குற்றம் சுமத்தப்பட்டவர் நீதிமன்றம் அளிக்கும் நிபந்தனையை ஏற்று கொண்டால் வழக்கு விசாரணை முடியும் வரையில் பெயிலில் சிறையிலிருந்து வெளியில் இருக்கலாம்.
வழக்கு விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்டவர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி நிரந்தரமாக விடுவிக்கப்படுவர்.
ஜாமீன் நிபந்தனைகள் என்ன?
குற்றஞ்சாட்டப்பட்டவரை பெயிலில் எடுப்பதற்கு அது சிறிய குற்றம் என்றால், ரூ.50,000/- மதிப்புள்ள அசையா சொத்து வைத்திருக்கும் இரண்டு நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும்.
குறிப்பிடும் நாளில் ஜாமீன்தாரர்கள் நீதிமன்றத்திற்கு அசல் குடும்ப அட்டையுடன் செல்ல வேண்டும்.
ஜாமீன்தாரர்களிடம் கேட்கப்படும் கேள்விகள், மற்றும் பெயில் நடைமுறை என்னென்ன?
நீதிபதி ஜாமீன்தாரர்களிடம் குற்றம் சாட்டப்பட்டவரை உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்பார்?
குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் என்ன?
குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தையின் பெயர் என்ன?
குற்றம்சாட்டப்பட்டவர் எந்த ஊரில் வசித்து வருகிறார்?
குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி பெயர் என்ன?
குற்றம்சாட்டப்பட்டவர் என்ன குற்றம் செய்துள்ளார்?
உங்கள் பெயர் என்ன?
உங்கள் தந்தையின் பெயர் என்ன?
உங்கள் சொத்து எந்த ஊரில் உள்ளது?
உங்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன?
குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் என்ன?
குற்றம்சாட்டப்பட்டவரின் தந்தையின் பெயர் என்ன?
குற்றம்சாட்டப்பட்டவர் எந்த ஊரில் வசித்து வருகிறார்?
குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி பெயர் என்ன?
குற்றம்சாட்டப்பட்டவர் என்ன குற்றம் செய்துள்ளார்?
உங்கள் பெயர் என்ன?
உங்கள் தந்தையின் பெயர் என்ன?
உங்கள் சொத்து எந்த ஊரில் உள்ளது?
உங்கள் சொத்துக்களின் மதிப்பு என்ன?
இது போன்ற பல கேள்விகளை நீதிபதி ஜாமீன்தாரர்களிடம் கேட்பார்.அவற்றிற்கு தகுந்த பதில்களை suretiesகள் சொல்ல வேண்டும்.
குறிப்பிடும் நிபந்தனைகளின்படி குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அல்லது காவல் நிலையத்தில் ஆஜராகாவிட்டால் உங்களை கைது செய்ய நேரிடும் என்பதையும் நீதிபதி ஜாமீன்தாரர்களிடம் தெரிவிப்பார்.
பின்பு ஜாமீந்தாரர்களின் குடும்ப அட்டையில் நீதிமன்ற முத்திரை வைத்து பெயில் வழங்கப்படும்.
பெயில் மறுப்பு மற்றும் மேல் முறையீடு குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை பெயிலில்விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும்.
அதனை வைத்துதான் குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
ஒருவரது பெயில்மனு தள்ளுபடி ஆனால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் மனு போடலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்.
Thanks for your information.
ReplyDeleteநன்றி🙏
DeleteFIR TO JUDGEMENT .. Konjam detail ha sollunga sir
ReplyDeletePost a Comment