ஒரு குத்தகைதாரருக்கும் உரிமையாளருக்கும் இடையிலான தகராறிற்கு என்ன தீர்வு?

Pragatheesh.BA.LLB (வழக்கறிஞர்)
By -

ஒரு இடத்தையோ வீட்டையோ குத்தகைக்கு கொடுக்க போகிறோம் என்றால் கட்டாயம் ஒப்பந்தம் போட வேண்டும் இந்த ஒப்பந்தம் உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் இடையே ஏற்படக்கூடிய வீண் சண்டைகளையும் தேவையில்லாத குழப்பங்களையும் சரி சரிசெய்ய உதவுகிறது ஒப்பந்தம் இல்லை என்றால் பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பது கடினம்.

What-is--the-solution-to-a-dispute-between-a-tenant-and-a-landlord

குத்தகைதாரரை வெளியேற்றம் மற்றும் வீண் தகராறுகளை தவிர்க்க அவசியமானது என்ன?


உங்கள் வீட்டையோ அல்லது இடத்தையோ குத்தகைக்கு கொடுக்கிறீர்கள் என்றால் குத்தகை கொடுக்கும் நீங்களும் குத்தகைக்கு வீட்டை பெற்றுக்கொள்பவரும் இணைந்து கட்டாயம் ஒரு ஒப்பந்தப் பத்திரத்தை உருவாக்க வேண்டும்.

குத்தகை ஒப்பந்தத்தை உருவாக்குவது மிக அவசியம் ஏன்னென்றால் பின் நாட்களில் வீட்டு உரிமையாளருக்கும் குத்தகை பெற்றவருக்கும் இடையே ஏற்படுகிற சண்டை சச்சரவுகள் மற்றும் கருத்துவேறுபாடுகளின் போது இந்த ஒப்பந்தப் பத்திரம் இருந்தால் மட்டும் தான் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் தகராறுகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும். இல்லாது போனால் இரு தரப்பினரின் தகராறுகளை தீர்ப்பது மிகவும் கடினமாகிவிடும்.

சொத்து தகராறுகளைத் தீர்ப்பதற்கான வழிகள் என்ன?


குத்தகை ஒப்பந்தப்பத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது?


ஒருவேளை குத்தகை ஒப்பந்தபத்திரம் இல்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அந்த புகாரின் விசாரணையில் ஒப்பந்தம் எதுவும் போடாமல் விட்டுவிட்டோம் தற்போது வீட்டை காலி செய்ய மறுக்கிறார் என காவல்துறை அதிகாரியின் முலமாக பேச்சிவார்த்தை செய்து இடத்தை காலி செய்ய முயற்சிக்கலாம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் சரியாக அமையாது காரணம் குத்தகை வழக்கு சிவில் (உரிமையியல்) நடைமுறை வழக்கு என்பதால் காவல்துறை அதிகாரி இந்த தகராறுகளுக்கு குற்றவழக்கு பதிவு செய்ய முடியாது. மேலும் குத்தகை பெற்றவர் அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருந்தால் காவல்நிலையத்தில் உங்கள் புகார் செல்லாது நீதிமன்றம் போங்கள் என்று சொல்லி உங்கள் புகாரை நிராகரித்து விடுவார்கள். உங்கள் புகார் காவல்நிலையத்தில் நிராகரிக்கபட்டால் மேலதிகாரியிடம் புகாரை கொடுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒரு வழக்கறிஞரை அணுகுங்கள்.

ஒரு இடத்தை குத்தகைக்கு விடப் போகிறோம் என்றால் குத்தகை ஒப்பந்த பத்திரம் ஏன் தேவை?


ஒரு குத்தகை ஒப்பந்தத்தில் அவர் எவ்வளவு காலம் அந்த இடத்தை அனுபவிக்க முடியும் அதற்கான முன்பணம் எவ்வளவு மேலும் அந்த இடத்தில் அவருடைய பராமரிப்பு மற்றும் அவர் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை தெளிவாகச் சொல்லி இருப்பதனால் அதை அவர் மீரும் பட்சத்தில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை அந்த வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான அதிகாரம் உரிமையாளருக்கு உண்டு. இதுபோன்ற கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்கும் அதன் அடிப்படையில் அவரை உடனடியாக அந்த வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்த முடியும். அதனால் தான் ஒப்பந்தப்பத்திரம் கட்டாயம் தேவை. 

குத்தகை ஒப்பந்தப்பத்திரத்தில் என்னென்ன தகவல்கள் இடம்பெற வேண்டும்?

 
குத்தகைதாரருடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை உருவாக்குங்கள்.
மாதாந்திர வாடகை அல்லது ஆண்டு வாடகை ஆகியவற்றை அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள்.

தங்கும் காலம் எவ்வளவு என்றும் எப்போது பாத்திரத்தை புதுப்பிக்க வேண்டும் என்பதையும் ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள்.

பாதுகாப்பு முன் பண வைப்பு பற்றியும் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.

பராமரிப்பு பொறுப்புகளை தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள்.

பயன்பாட்டு பில்களை பற்றி தெளிவாக குறிப்பிடுங்கள். எடுத்துக்காட்டாக தண்ணீர் கட்டணம் மற்றும் மிகட்டணம் இது போன்றவே.

நீக்கத்திற்கான நிபந்தனைகள் குத்தகை பெற்றவர் எப்போது வீட்டை காலி செய்ய வேண்டும் என்பதையும் எப்படி காலி செய்யக்கூடாது என்பதையும் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடவும்.

இரு தரப்பினரும் சாட்சிகளுடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தில் இருக்கும் நிபந்தனைகாளை  மீறும் போது வெளியேற்றபடுவர் என்பதை தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.

குத்தகைதாரரை வெளியேற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?


ஒரு வீட்டை குத்தகைக்கு விடுவதற்கு முன் சச்சரவுகளைத் தவிர்க்கவும், ஒரு சுமூகமான ஏற்பாட்டை உறுதி செய்யவும் சட்ட நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் வீட்டை ஒருவருக்கு குத்தகைக்கு கொடுக்கிறீர்கள் ஆனால் குத்தகை காலம் முடிந்த பிறகும் அவர் அந்த வீட்டை காலி செய்து தரவில்லை என்றால் அவரை வெளியேற்றுவதற்கு சட்ட ரீதியான நடைமுறைகள் என்ன என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

 குத்தகைதாரரை வெளியேற்றுவதற்கு வரிசையாக கீழ்கண்ட ஐந்து நடைமுறைகளை பின்பற்றவேண்டும் :

1. குத்தகை ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்யவும் :

ஒரு வீட்டை குத்தகை விட்ட பிறகு அந்த குத்தகைதாரர் அந்த வீட்டை காலி செய்ய மறுத்தால் உடனடியாக உங்களுடைய குத்தகை ஒப்பந்தத்தை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும். குத்தகை ஒப்பந்தத்தில் அவர் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளையும் எழுதி இருப்போம் அதன்படி குத்தகைதாரரை வீட்டை விட்டு வெளியேற்றலாம்.

• குத்தகை காலம் முடிவடைந்த பிறகு குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்யாமல் புதிய ஒப்பந்தம் உருவாக்காமல் அதனை தொடர்ந்து அந்த இடத்தை காலி செய்யாமல் குத்தகைதாரர் இருந்தால் குத்தகையை ரத்து செய்து குத்தகைதாரரை வெளியேற்றலாம்.  

• ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளை கடைபிடிக்க தவறினாலோ குத்தகையை ரத்து செய்து குத்தகைதாரரை வெளியேற்றலாம்.    

• ஒருவேளை குத்தகை இடம் உரிமையாளருக்கு சொந்த அவசியத்திற்கு தேவைப்பட்டால் ஒரு அறிவிப்பை குததகைதாரருக்கு உரிமையாளர் அனுப்பி வைக்க வேண்டும் அந்த அறிவிப்பை பெற்று கொண்ட மூன்று மாதங்களுக்குள் குத்தகைதாரர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்.

• வேறு நபருக்கு அவர் குத்தகை கொடுத்தாலோ குத்தகையை ரத்து செய்து குத்தகைதாரரை வெளியேற்றலாம்.  

மேற்கண்ட நிபந்தனைகளை படித்து காண்பித்தபிறகும் குத்தகைதாரர் காலி செய்யாமல் இருந்தால் இரண்டாவது நடைமுறையை பின்பற்றுங்கள்.

2. அறிவிப்பை அனுப்பவும் :

ஒப்பந்த பத்திரத்தில் செல்லபட்ட நிபந்தனைபடி வெளியேற சொல்லியும் குத்தகைதாரர் குத்தகை இடத்தை காலி செய்யாமல் இருந்தால் காலி செய்யக் கோரி குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்பவும். 

என்னென்ன காரணத்திற்கு காலி செய்ய அறிவிப்பு வழங்க வேண்டும் :

1. குத்தகை ஒப்பந்தத்தின்படி அவருக்கு கொடுக்கப்பட்ட கால அளவு முடிந்த பின்னரும் குத்தகைதாரர் உங்கள் இடத்தை விட்டு வெளியேறாமல் இருந்தால் காலி செய்யக் கோரி குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்பவும். 

2. ஒரு குத்தகைதாரர் குத்தகை ஒப்பந்தத்தின் படி அவருக்கு கொடுக்கப்பட்ட கால அளவிற்குள் அந்த இடத்தை அனுபவிக்கலாம், அதற்கு முன்னதாக அவரை அந்த இடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றால் அதற்கு உரிமையாளர் தகுந்த அறிவிப்பை அவருக்கு வழங்க வேண்டும். 


3. குத்தகை ஒப்பந்தத்தின்படி நிபந்தனைகளையும் விதிகளையும் குத்தகைதாரர் கடைபிடிக்காத போது காலி செய்யக் கோரி குத்தகைதாரருக்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை அனுப்பவும். 

மேற்கண்ட அறிவிப்பை பெற்றுக்கொண்ட பின் உடனே குத்தகைதாரர் வீட்டை காலி செய்ய வேண்டும். அந்த அறிவிப்பை குத்தகைதாரர் பெற்று கொண்ட பின்னரும் வீட்டை காலி செய்யவில்லை என்றால் மூன்றாவது நடைமுறையை பின்பற்றுங்கள்.

3. பேச்சுவார்த்தை மேற்கொள்ளவும் :

குத்தகை காலம் முடிவடைந்த பிறகு மேலும் குத்தகை காலத்தை நீட்டிக்க விரும்பினால் பேச்சுவார்த்தை மூலமாக குத்தகைதாரரிடம் பேசி புதிய ஒப்பந்தத்தை உருவாக்கவும்.

குத்தகை காலம் முடிந்த பிறகும் குத்தகை காலத்தை நீட்டிப்பு செய்யாமல் இடத்தை விட்டு வெளியேறாமல் குத்தகைதாரர் இருந்தால் பேச்சுவார்த்தை மூலமாக சமரசம் செய்து கொள்ள முயற்சி செய்யவும்.

மேற்கண்ட பேச்சுவார்த்தையில் அவர் வெளியேற சம்மதித்தால் நான்காவது நடைமுறையை பின்பற்றுங்கள்.

4. பாதுகாப்பு முன்வைப்பு தொகை :

குத்தகைதரார் பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொண்டு வெளியேற சம்மதித்தால் குத்தகைதாரருக்கு கட்டணம் நிலுவையில் இருந்தால் (மின் கட்டணம்,தண்ணீர் கட்டணம்,) குத்தகை பாதுகாப்பு முன்வைப்பு தொகையிலிருந்து கட்டணங்களை கழித்துவிட்டு  மீதி தொகையை குத்தகைதாரரிடம் ஒப்படைக்கவும். பேச்சுவார்த்தைக்கு பின்னரும் குத்தகைதாரர் குத்தகை இடத்தை விட்டு வெளியேற மறுத்தால் ஐந்தாவது நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கவும்.


5. சட்ட நடவடிக்கை:

மேற்கண்ட நடவடிக்கைகளை கையாண்ட பிறகும் குத்தகைதாரர் உங்கள் இடத்தில் இருந்து காலி செய்யவில்லை என்றால் அவரின் வெளியேற்றத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் அவரை விசாரணை செய்து அவரை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றம் செய்வதற்கான தீர்ப்பை வழங்கும்.

வாடகை ஒப்பந்தத்தை எவ்வாறு உருவாக்குவது?

முடிவுரை சுருக்கமாக :


ஒரு இடத்தையோ,கட்டிடத்தையோ, விட்டையோ,குத்தகைக்கு கொடுக்க போகிறீர்கள் என்றால் எதிர்காலத்தில் சண்டைசச்சரவுகள் ஏற்படாமல் இருக்க குத்தகை ஒப்பந்தத்தை உரிமையாளரும் குத்தகைதாரரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்.
குத்தகைதாரருக்கும் உரிமையாளருக்கும் இடையே பிரச்சனை வராமலிருக்க குத்தகை ஒப்பந்தத்தில் பல நிபந்தனைகள் எழுதபட்டு இருக்கும் அதை இருதரப்புமே கடைபிடிக்க வேண்டும் மீறும் பட்சத்தில் இருதரப்புமே நீதிமன்றத்தை அணுகலாம்.

குத்தகைதாரர் குத்தகை பெற்ற இடத்தை காலி செய்ய மறுத்தால் உடனடியாக அவருடைய ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்து ஏன் காலி செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி வெளியேறும்படி அறிவிப்பை அவருக்கு அனுப்பி வைக்கவேண்டும் அதற்கு பின்னரும் அவர் குத்தகை பெற்ற இடத்தை காலி செய்ய மறுத்தால் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாக அவரை வெளியேறும் படி சொல்லலாம். 

அவருடைய வெளியேற்றத்தின் போது குத்தகை பெற்ற இடத்தில் சேதம் ஏதாவது இருந்தால் அவருடைய பாதுகாப்பு முன்வைப்பு பணத்திலிருந்து சேதத்திற்கான தொகையை கழித்து விட்டு மீதம் தொகையை அவரிடம் கொடுத்து அவரை அந்த இடத்திலிருந்து வெளியேற்றலாம்.

ஒருவேளை அவர் அதற்கு பின்னாலும் அந்த இடத்தை காலி செய்ய மறுத்தால் நீதிமன்றம் மூலமாக வழக்கை தாக்கல் செய்து தான் அவரை வெளியேற்ற முடியும்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!