நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்து அந்த வழக்கு பற்றிய அறிவிப்பினை பிரதிவாதிக்கு அல்லது எதிர்மனுதாரருக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை அழைப்பாணையின் மூலமாக அந்த வழக்கின் எதிர்மனுதாரர் அல்லது பிரதிவாதிக்கு தெரியப்படுத்திய பின் பிரதிவாதியோ அல்லது எதிர்மனுதாரோ நீதிமன்றத்தில் நேரடியாக தோன்றி அவரது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும். எக்ஸ் பார்ட்டி என்றால் தமிழில் ஒருதலைப் பட்சமாக தீர்ப்பு வழங்குவது என்று அர்த்தம்.
ஒருவேளை பிரதிவாதியால் நீதிமன்றத்தில் தோன்ற முடியவில்லை என்றால் பிரதிவாதியின் சார்பாக அவருடைய வழக்கறிஞர் பிரதிவாதியிடம் அல்லது எதிர்மனுதாரிடமிருந்து வக்காலத்து நாமா பெற்று கொண்டு நீதிமன்றத்தில் அதை தாக்கல் செய்து பிரதிவாதி அல்லது எதிர்மனுதாரர் சார்பாக அவர்களுடைய வழக்கறிஞர் அவர்களுக்காக வழக்கை நடத்தலாம் அவர்களுக்காக வாதிடலாம் அவர்களுக்காக ஆவணங்களை நீதிமன்றத்தின் முன்பாக தாக்கல் செய்யலாம் இப்படி சிவில் வழக்குகளில் (உரிமையியல் வழக்குகளில்) வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்த முடியும் ஆனால் ஒரு அழைப்பாணையைப் பெற்ற பிறகு நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் விஷயம் தெரிந்த பிறகும் நீதிமன்றத்தில் தோன்றி பிரதிவாதியோ எதிர்மனுதாரரோ அல்லது அவர்களுடைய வழக்கறிஞரோ அவர்கள் பக்க உண்மையை நிரூபிக்க தவறினால் நீதிமன்றத்தில் தோன்றாத காரணத்தால் பிரதிவாதியின் அல்லது எதிர்மனுதாரரின் பக்கம் உண்மையில்லை என்ற கருத்தை நீதிமன்றம் எடுக்கிறது அதன் பிறகு பிரதிவாதியின் அல்லது எதிர்மனுதாரரின் பக்க விசாரணையை முழுவதுமாக முடித்து வைத்து அவருக்கு எதிராக ஒருதலைப் பட்ச தீர்ப்பு வழங்கப்போவதாக ஒரு உத்தரவை நீதிபதி அறிவிப்பார்.
நீதிமன்றம் வாதி தாக்கல் செய்த ஆவணங்களை சரிபார்த்து அவர் தரப்பில் நியாயம் இருப்பதால் வாதிக்கு சாதகமாக அந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவார்கள்.
எக்ஸ் பார்ட்டி விளக்கம் :
ஒரு வழக்கின் பிரதிவாதி எக்ஸ்பார்ட்டியாக அறிவிக்கப்பட்டால் அவர் தரப்பு வாதம் முடித்து வைக்கப்பட்டது எனப்படும் அதாவது இதை விளக்கமாக சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள் பிரதிவாதியின் வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்து சொல்ல பிரதிவாதிக்கு அழைப்பாணை மூலமாக வாய்ப்பு வழங்கப்பட்டது அழைப்பாணையை பெற்ற பிறகு வழக்கு இருப்பதை தெரிந்த பின்பும் நீதிமன்றத்தில் பிரதிவாதி அவர்தரப்பு நியாயத்தை நிரூபிக்க தவறிவிட்டார் அதனால் அவர்தரப்பு வாக்குமூலங்கள் சாட்சியங்களையும் விசாரணையும் முடித்து வைத்து அவருக்கு எதிராக ஒரு தலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படுகிறது என நீதிமன்றத்தில் அறிவிக்கபட்டு அதன் பின்னர் வாதியின் சாட்சி ஆவணங்களை சரிபார்த்து வாதிக்கு சாதகமாக எக்ஸ்பார்ட்டி என்ற ஒருதலைப் பட்ச தீர்ப்பு.
பிரதிவாதி அல்லது எதிர்மனுதாரருக்கு எதிராக ஒரு தலைப்புச்ச தீர்ப்பு அறிவிக்கபட்ட பிறகு உடனடியாக அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுமா?
ஒரு தலைப்புச்ச தீர்ப்பு அறிவிக்கபட்ட பிறகு உடனடியாக அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுமா என்றால் இல்லை ஒருதலைப் பட்ச சாட்சி (EX parte Evidence) என்ற நடைமுறை நீதிமன்ற வழக்கில் பின்பற்றப்படும் அதாவது வாதியின் தரப்பு சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சொல்லி நீதிபதி உத்தரவிடுவார் அதுதான் எக்ஸ்பார்ட்டி எவடன்ஸ் ( EX Parte Evidence) வாதியின் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் வழக்கு தீர்ப்பு வழங்கப்படும்.
எக்ஸ்பார்ட்டி எந்த காரணத்திற்காக வழங்கபடுகிறது.
எக்ஸ்பார்ட்டி எந்த காரணத்திற்காக வழங்கபடுகிறது என்பதை சுருக்கமாக சொல்கிறேன் நீதிமன்ற வழக்கு இருப்பது தெரிந்தும் வழக்கின் எதிர் தரப்பு கட்சிகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு போகவில்லை என்றால் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வழங்கபடும். அது எப்படி எதிர் தரப்புக்கு வழக்கு இருப்பது தெரியும் என்று நீதிமன்றம் நம்புகிறது என்றால் வாய்மொழி சாட்சிகளை நீதிமன்றம் நம்புவது இல்லை மாறாக ஆவணங்களை நம்புகிறது. அதாவது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை தெரியபடுத்த அழைப்பாணைகள் வாதியால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அந்த அழைப்பாணையை நீதிமன்றம் வழக்கின் எதிர் பக்கத்திற்கு ஒப்புகை அட்டையுடன் (அக்னாலேஜ்மென்ட் கார்டு Acknowledgment Card) பதிவு தபாலில் அனுப்புகிறது. அந்த அழைப்பாணையை வழக்கின் பிரதிவாதியோ அல்லது எதிர்மனுதாரரோ பெற்ற பின்னர் அந்த ஒப்புதல் அட்டை திரும்ப நீதிமன்றத்திற்கு அனுப்பபடும் அவர் அழைப்பாணையை பெற்ற சான்றாக அந்த ஒப்புகை அட்டை எடுத்துக்கொள்ளபடும். ஒருவேளை பிரதிவாதிக்கு அனுப்பபடும் அழைப்பாணையை அவர் பெறவில்லை என்றால் திரும்பவும் அனுப்ப நீதிபதி உத்தரவிடுவார் தொடர்ந்து அவர் அவர் அழைப்பாணையை பெறவில்லை என்றால் முகவரி சரிபார்க்க உத்தரவிடுவார். சரியான முகவரியில் இருந்தும் பிரதிவாதியோ /எதிர்மனுதாரரோ அழைப்பாணையை பெறாமல் தவிரத்து வந்தால் நீதிமன்றம் பிரைவேட் நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடும் அதன்பிறகும் பெறவில்லை என்றால் பேப்பரில் பப்ளிஸ் செய்ய நீதிபதி உத்தரவிடுவார் . பேப்பரில் பதிவிட்ட தினத்தில் பிரதிவாதியோ /எதிர்மனுதாரரோ நீதிமன்றத்தில் தோன்றவில்லை என்றால் அவரது பெயரை அழைத்து பார்த்துவிட்டு வழக்கின் பிரதிவாதி /எதிர்மனுதாரர் எக்ஸ் பார்டியாக அறிவிக்கப்படுவார். வழக்கு இருப்பதை இந்த வழிமுறைகளில் எதிர் பக்கத்திற்கு நீதிமன்றம் தெரியபடுத்தும் அதன் பிறகே எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வழங்கபடுகிறது.
எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு நோக்கம் என்ன ஏன் வழங்கபடுகிறது.
எக்ஸ்பார்ட்டி வழக்கில் பிரதிவாதி /எதிர்மனுதாரர் பக்க விசாரணையை திரும்ப நடத்த முடியுமா?
எக்ஸ் பார்ட்டி வழக்கில் வழக்கின் தீர்ப்பு வழங்குவதற்கு முன் பிரதிவாதி எதிர்மனுதாரர் பக்க சாட்சி ஆவண விசாரணையை தீர்ப்பு வழங்கியுடன் நீதிமன்ற தீர்ப்பு வழங்குவதற்கு முன் செட் ஆக்சைட் (set aside) என்ற மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கில் பிரதிவாதி/எதிர்மனுதாரர் வாதத்தை மீண்டும் தொடரலாம்.
إرسال تعليق