பெண்களுக்கு எதிரான வன்முறை. Violence against women .

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்றால் சமூகமும் இதோடு சம்மந்தப்பட்டு இருக்கிறது காரணம் அதில் வாழும் அனைவரும் அதற்க்கு பொறுப்பாளிகள் தான். பெண் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகும் போது அதை துணிவுடன் எதிர் கொள்ள வேண்டும். இதற்கு சமுதாயம் பெண் சொல்வதை சொல்ல நினைப்பதை காது கொடுத்து கேட்க வேண்டும்.

சமூதாயம் என்பது ஒரு பெண்ணை சுற்றி இருக்கிற தாய் தந்தை அண்ணன் தம்பி தங்கை மாமா சித்தப்பா நண்பர்கள் இப்படி அனைவரும் பெண்ணின் நலனில் அக்கறைகாட்ட வேண்டும்.ஆபத்தை சொல்ல வரும் போது அலட்சியம்காட்ட கூடாது அது பேராபத்தில் முடியலாம் தற்போதுள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் தனது குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து மனம்விட்டு பேச வேணாடும் இதுவே நிறைய பிரச்சினைகளை சரி செய்துவிடும்.

நீதிதுறைக்கு பெண்கள் நலனில் பங்களிப்பு.

நீதிதுறை பெண்களின் நலனில் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அதனால் புதிய சட்டங்கள் சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது அதற்க்கு மிக சிறந்த எடுத்துகாட்டு போக்சோ சட்டம் மகிளா நீதிமன்றங்கள் இன்னும் பாதுகாப்பு கருதி பல சட்ட மாற்றங்களை சீர்செய்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.

சரி இப்போது பெண்களுக்கு எதிரான அவர்களுடைய பாதுகாப்புக்கு எதிரான குற்றங்களை வரிசையாக பார்ப்போம்.

பெண்ணின் கற்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் செயல்படுவது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது, தவறான சொற்களை உபயோகிப்பது சைகையை காட்டுவது குற்றமாகும், பாலி­யல் சீண்டல்கள், உடல் பாகங்களை தொட்டு பேசுவது, புகைப்படம் எடுப்பது, தவறான குறுந்தகவலை மொபைல் மூலம் அனுப்புவது, ஆபாச பேச்சு, இணையத்தில் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்தவது, இப்படி அவர்கள் விருப்பம் இல்லாமல் தொந்தரவு செய்யும் எதுவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகும்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்.
வழக்கைத் தாக்கல் செய்யும் ஒவ்வொரு தரப்பினரும் நேரில் அல்லது வழக்கறிஞர் மூலம் தங்களது தரப்பு வாதத்தை எடுத்துவைக்க நீதிமன்றங்கள் அனுமதி தருகின்றன. 
வழக்கு விசாரணை பகிரங்கமாக நடத்தப்படுகிறது.
 
கற்பழிப்பு போன்ற சில வழக்குகளில் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறான இரகசிய விசாரணை வீடியோ கேமராவால் பதிவு செய்யப்படும்.

வழக்கு விசாரணையின் போது தனியாக நீதிபதியிடம் பேச கூட அனுமதிக்கப்படுகிறார்கள். வழக்
கு சம்பந்தப்பட்ட தகவல்களை அனைவரின் முன் தயக்கம் இருப்பவர்கள் இதை பின்பற்றலாம்.

இந்த இரகசிய விசாரணை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங் மூலம் பாருங்கள்.இந்த நடைமுறை நீதிமன்றத்தில் எப்படி பின்பற்றபடுகிறது தெரிந்து கொள்ளுங்கள்
 
இரண்டு திருமணம், விபச்சாரம், கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு துரோகம் செய்வது, இது போன்ற வழக்குகளைக் குற்றவியல் நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன. 

இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களின் வழக்கு விசாரணை முறை கூட அவர்களுக்கு எந்த அச்ச உணர்வும் ஏற்படுத்த கூடாது குற்றம் செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி நீதிதுறை பெண்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டி வருகிறது.

பெண்கள் சமூதாயத்தில் பாதுகாப்பாக அவர்களுக்கு எதிரான குற்றங்களை கண்டு பயப்படாமல் தைரியமாக தலை நிமீர்ந்து அவர்களுக்கு எதிரான குற்றங்களின் குற்றவாளிகளின் முக திரையை கிழித்து சுய மரியாதையாக வாழ வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post