contested-dismiss

contested-dismiss

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு என்ன நிலையில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும்போது அந்த வழக்கு ஏற்கனவே கண்டெஸ்ட்டேட்  டிஸ்மிஸ் என்பதன் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்று நீங்கள் தெரிந்து கொண்டால் எதற்காக இந்த நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது புரியாமல் குழப்பத்தில் இருந்திருக்கலாம் இதை நீங்கள் உங்களுடைய வழக்கறிஞரிடமே கேட்டு தெரிந்து கொள்ள முடியும்.

contested-dismiss என்பது என்ன?

நீங்கள் இணையதளத்திலையோ அல்லது உங்களுடைய வழக்கின் வழக்கறிஜரிடமோ வழக்கின் ஸ்டேட்டஸ் செக் பண்ணும்  உங்களுடைய வழக்கை contested-dismiss பண்ணிட்டாங்க என்ற செய்தியை அறியும் போது contested-dismiss அப்படிங்கற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் நீங்கள் குழம்பி போகலாம்.

contested-dismiss என்பதன் அர்த்தம் என்னவென்றால் உங்களுடைய வழக்கு போட்டியிடப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதுதான் அர்த்தம். 

அதாவது உங்களுடைய வழக்கு நடத்தப்பட்டு இருதரப்பும் அதாவது வாதியும் பிரதிவாதியும் போட்டியிட்டு மெரிட்டில் வழக்கை எடுத்து சரியாக நடத்தியும் வழக்கில் சரியான காரணங்கள் இல்லாத பட்சத்துல அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. 

வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிரதிவாதி வழக்கில் ஆஜராகி வழக்கில் கவுண்டர் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்ட பிறகு வழக்கில் சரியான கரணம் இல்லை என்று நீதிபதி கருதினால் வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்யலாம் இதை தான் contested-dismiss என்று சொல்கிறேன். 

contested-dismiss திரும்ப நடத்த முடியுமா?

contested-dismiss என தள்ளுபடி ஆனா வழக்கை திரும்பவும் நடத்த முடியும்.வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் கரணம் சரியாக  கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்குமானால் அதை திரும்ப எடுத்துச் சொல்லி அந்த வழக்கை அப்பீலுக்கு கொண்டுவந்து அந்த வழக்கை திரும்பவும் நடத்த முடியும்.

வழக்கு எதற்காக contested-dismiss செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

இதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த வழக்கின் நீதிமன்ற உத்தரவை படித்துப் பார்த்தால் மட்டும்தான் அந்த வழக்கு எந்த காரணத்திற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வழக்கின் உத்தரவை தெரிந்து கொண்டு தவறான கருத்து புரிதலில் வழக்கு செய்யப்பட்டது என்றால் அந்த வழக்கை நாம் அப்பிலுக்கு கொண்டு செல்ல முடியும் அதன் மூலமாக இந்த வழக்கை திரும்பவும் நடத்தி வழக்கில் வெற்றி பெற முடியும்.

நீதிபதியின் தவறான கருத்து புரிதலின் அடிப்படையில் சில நேரங்களில் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம் அதற்கு காரணம் அந்த வழக்கில் சரியான காரணம் சொல்லப்படாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் அதை சரி செய்து மீண்டும் அந்த வழக்கை அப்பிலுக்கு கொண்டு சென்று வழக்கை மீண்டும் நடத்தும் போது அந்த வழக்கில் வெற்றி பெற முடியும்.

இணையதளத்தில் contested-dismiss என்று சுருக்கமாக பதிவிட்டதன் கரணம் என்ன?

வழக்குகளின் நிலையை ஆன்லைன்ல பதிவிடும் போது ஒரு பெரிய வார்த்தையை சுருக்கி சின்ன வார்த்தையாக காட்டுவதற்கு தான் இந்த contested-dismiss அப்படிங்கற வார்த்தையை நீதிமன்றம் பயன்படுத்துகிறது. அதை வைத்து ஒரு வழக்கின் முழுமையான உத்தரவை நாம கணிக்கவே முடியாது வழக்கின் நிலையை மட்டும் தெரிந்துகொள்ள முடியும் முழுமையான உத்தரவை படித்து பார்த்து தான் contested-dismiss எதற்காக வழங்கியிருக்கிறார்கள் என்பதை  தெரிந்து கொள்ள முடியும்.

உங்களுடைய வழக்கு contested-dismiss ஆனதற்கு வழக்கறிஞர் காரணமா?

வழக்கறிஞர் வழக்கின் சரியான காரணத்தைச் சொல்லி அதற்கான சட்ட வழிமுறைப்படி தீர்வுகளை நீதிமன்றத்தில் வேண்டி இருப்பாரானால் தள்ளுபடி ஆகாமல் வழக்கை காப்பாற்றி இருக்க முடியும், ஒரு வேளை வழக்கறிஞரிடம் வாதி சரியாக தனக்கு இருக்கும் பிரச்சனையை பற்றி சொல்லி புரிய வைக்க தவறி இருந்தால் இதன் காரணமாக கூட வழக்கு தள்ளுபடி ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

contested-dismiss பற்றி வீடியோவில் பாருங்கள்.

contested-dismiss வீடியோ லிங்க் இதோ contested-dismiss

Post a Comment

أحدث أقدم